ADDED : செப் 20, 2025 03:47 AM
பாலக்காடு:பாலக்காடு தீயணைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதலையில், கணக்கில் வராத, 13,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பென்னி ஜேக்கப் தலைமையிலான போலீசார், பாலக்காடு பிராந்திய தீயணைப்பு அலுவலகத்தில், நேற்று சோதனை நடத்தினர். அப்போது, அலுவலக அலமாரியின் பின் பக்கத்தில், மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத 13,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து டி.எஸ்.பி., பென்னி ஜேக்கப் கூறியதாவது: கட்டட உரிமையாளர்களிடம், 'பயர்' ஆட்சேபனை இல்லை சான்றிதழ் வழங்க, பிராந்திய தீயணைப்பு அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, நேற்று அதிரடி சோதனை நடத்தினோம்.அப்போது, கணக்கில் வராத, 13,000 ரூபாய் அலமாரியின் பின் பக்கத்தில் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு, தீயணைப்பு அலு வலர் சரியான பதில் அளிக்கவில்லை. சோதனை அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

