ரூ.65 கோடி ஊழல் விவகாரம்: நடிகரிடம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை
ரூ.65 கோடி ஊழல் விவகாரம்: நடிகரிடம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை
ADDED : மே 26, 2025 03:46 PM

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ரூ.65 கோடி ஊழல் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மாடலும், பாலிவுட் நடிகருமான டினோ மோரியா மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாயும் ஆறுகளில் ஒன்று மிதி. இதில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் திட்டத்திற்காக, ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், ஒப்பந்தங்கள் முறைகேடாக வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன் அடிப்படையில்,மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு, சமீபத்தில் இந்த மிதி ஆறு சுத்திகரிப்பு திட்ட ஊழல் தொடர்பாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளது. ஒப்பந்ததாரர்கள் மற்றும் மும்பை மாநகராட்சி அதிகாரிகளை குறிவைத்து பல இடங்களில் சோதனை நடத்தி, பலரை விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, டினோ மோரியாவுடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.
இது தொடர்பாக பாலிவுட் நடிகர் டினோ மோரியா பெயரும் இதில் இடம்பெற்ற நிலையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து இன்று மும்பை காவல் தலைமையகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு டினோ மோரியா நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடைபெற்றது.