ஏழாம் கட்ட தேர்தல்: வாக்களித்தவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி
ஏழாம் கட்ட தேர்தல்: வாக்களித்தவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி
UPDATED : ஜூன் 01, 2024 10:37 PM
ADDED : ஜூன் 01, 2024 09:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஏழாம் கட்ட தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற லோக்சபாவிற்கு ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில் இன்று 8 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு இறுதி கட்ட தேர்தல் இன்றுடன் நிறைவு பெற்றது. இத்தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ‛‛எக்ஸ்'' வலைதளத்தில் கூறியுள்ளது, உங்கள் உரிமையை பயன்படுத்தியமைக்கு நன்றி, உங்களின் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு அடிக்கலாக இருக்கும். இந்தியாவின் நாரி சக்தி, இளைஞர் சக்தி நம் தேசத்தில் ஜனநாயக உணர்வு செழித்து வளர்வதை உறுதிசெய்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.