ADDED : ஜூன் 27, 2025 12:59 AM

பெரு நகரங்களில் வீடு வாங்க, நாட்டின் 5 சதவீத பணக்காரர்கள் கூட, 109 ஆண்டுகளுக்கு, வருமானத்தில் 30 சதவீதத்தை சேமிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏழை மக்கள் வீடு வாங்குவது எட்டாக்கனியாகி விட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளி விபரங்களை யாராவது கூறினால், உள்நாட்டு பட்ஜெட் பற்றிய உண்மையை அவர்களுக்கு காட்டுங்கள்.
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
அனுமதிக்க மாட்டோம்!
நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவோ, வெறுக்கவோ இல்லை. ஆனால், குறிப்பிட்ட மொழியை திணிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மொழியின் அடிப்படையில், நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்த பா.ஜ., முயற்சிக்கிறது. மஹாராஷ்டிராவில் மொழி தொடர்பாக அவசரநிலை நீடிக்கிறது.
உத்தவ் தாக்கரே, மஹா., முன்னாள் முதல்வர் உத்தவ் சிவசேனா
இரட்டை வேடம்!
ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு மட்டுமே, அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., பயன்படுத்துகிறது. ஆட்சிக்கு வந்தவுடன், அரசியலமைப்பை அக்கட்சி மதிப்பதில்லை. பா.ஜ., நிர்வாகிகளும் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சும், தேர்தலுக்கு பின் ஒரு பேச்சும் பேசுகின்றனர். இவர்களை நம்பி மக்கள் தான் ஏமாறுகின்றனர். பா.ஜ.,வுக்கு இரட்டை வேடம் பழகிவிட்டது.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி