ADDED : ஜூன் 19, 2025 03:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, சிகிச்சைக்கு பிறகு இன்று வீடு திரும்பினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா(78), கடந்த 15 ல் டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவு ஒவ்வாமை, செரிமானப் பிரச்னை, வயிற்று கோளாறு போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல் நலன் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு, சோனியா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சோனியா வீடு திரும்பியதை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.