தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கனடாவில் படிப்பு: 86% இந்திய மாணவர்கள் தவிர்ப்பு

கனடாவில் படிப்பு: 86% இந்திய மாணவர்கள் தவிர்ப்பு

கனடாவில் படிப்பு: 86% இந்திய மாணவர்கள் தவிர்ப்பு


UPDATED : ஜன 17, 2024 04:59 PM

ADDED : ஜன 17, 2024 04:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2024 04:59 PM ADDED : ஜன 17, 2024 04:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ''இந்தியாவில் இருந்து கனடாவுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையில் கடந்த ஆண்டு 86 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது'' என கனடா அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: இந்தியா - கனடா இடையேயான உறவில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இங்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. கடந்த 2022ம் ஆண்டு கடைசி 3 மாதங்களில் கனடாவுக்குச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 940 ஆக இருந்த நிலையில், 2023ம் ஆண்டு கடைசி 3 மாதங்களில் இந்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 910 ஆக சரிந்துள்ளது. இதன் மூலம் படிக்க வரும் இந்திய மாணவர்களில் 86 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

3 காரணங்கள்

இதற்கு மூன்று காரணங்கள் உள்ளது. ஒன்று, இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் கசப்பான உறவு. இரண்டாவது, இந்திய மாணவர்கள் தங்குவதற்கு இங்கு போதுமான அளவு வீடுகள் இல்லாதது. மூன்றாவது, இங்குள்ள பல கல்வி நிலையங்களில் போதுமான கல்வி வசதிகள் இல்லாதது.

அதேநேரத்தில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க கனடாவும் முயன்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us