ADDED : ஜன 27, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கபல்லாபூர்,- அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும், பாகேபள்ளி எம்.எல்.ஏ., சுப்பாரெட்டி, கார்ப்பரேஷன், வாரிய தலைவர் பதவியை நிராகரித்துள்ளார்.
கர்நாடக அரசு, மூத்த எம்.எல்.ஏ.,க்களை, கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர் பதவிக்கு நியமித்து, நேற்று உத்தரவிட்டது.
சிக்கபல்லாபூரின், பாகேபள்ளி எம்.எல்.ஏ., சுப்பாரெட்டி, அமைச்சர் பதவியை விரும்புகிறார். இவரை கர்நாடக விதை பொருள் கார்ப்பரேஷன் தலைவராக, அரசு நியமித்துள்ளது.
தனக்கு வழங்கிய கார்ப்பரேஷன், வாரிய தலைவர் பதவியை சுப்பாரெட்டி நிராகரித்துள்ளார்.
அத்துடன் மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்துள்ளார்.
தன் உதவியாளர் மூலம், தனக்கு கார்ப்பரேஷன், வாரிய தலைவர் தேவையில்லை என, அரசுக்கு தகவல் அனுப்பிஉள்ளார்.

