டி.எம்.ஆர்.சி., வழியில் டி.டி.சி., ரூ.2,600 கோடி திரட்ட திட்டம்
டி.எம்.ஆர்.சி., வழியில் டி.டி.சி., ரூ.2,600 கோடி திரட்ட திட்டம்
ADDED : மே 13, 2025 10:14 PM
புதுடில்லி:பண்டா பகதுார் மார்க் மற்றும் சுக்தேவ் விஹார் ஆகிய இரு பேருந்து நிலைய வளாகங்களில் வணிக நடவடிக்கைகளை அனுமதிப்பதன் மூலம் ஏறக்குறைய 2,600 கோடி ரூபாய் ஈட்டுவதற்கு டி.டி.சி., எனும் டில்லி போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு மாநில அரசு கடந்த வாரம் அனுமதி அளித்தது. திரட்டப்படும் நிதியை கொண்டு, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த டி.டி.சி., திட்டமிடுகிறது.
இத்தகைய தொடர் முயற்சிகளார் தன்னுடைய வருவாயை அதிகரிக்கவும் அது திட்டமிடுகிறது.
நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பார்க்கிங் திறனை அதிகரித்தல், பல நிலை கிடங்குகளை உருவாக்குதல், குடியிருப்பு காலனிகளை மறுசீரமைத்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்த அதன் கிடங்குகள் மற்றும் முனையங்களை வணிகமயமாக்குதல் ஆகியவை இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பொறியியல் திட்டங்கள் இந்தியா லிமிடெட் பகிர்ந்து கொண்ட மதிப்பீடுகளின்படி, பண்டா பகதுார் மார்க் பணிமனைத் திட்டம் 1,858 கோடி ரூபாயையும் சுக்தேவ் விஹார் திட்டம் 758 கோடி ரூபாயையும் வருவாயாக ஈட்டக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
தன்னுடைய சொத்துக்களில் இருந்து நிதி வருவாயை பெருக்கும் டி.எம்.ஆர்.சி., எனும் டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனை போன்று டி.டி.சி.,யும் திட்டமிடுகிறது.

