UPDATED : ஜூலை 07, 2024 04:14 PM
ADDED : ஜூலை 07, 2024 09:18 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது. குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. ரஜோரி மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடந்தது.
அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து நேற்று நள்ளிரவு முதல் நடத்திய தேடுதல் வேட்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு இந்திய ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 07) ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். ராணுவ வீரர் ஒருவர் பலத்த காயமடைந்தார். பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் வேட்டையில், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.