sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருவள்ளுவர் தின விழா பெங்களூரில் கோலாகலம்

/

திருவள்ளுவர் தின விழா பெங்களூரில் கோலாகலம்

திருவள்ளுவர் தின விழா பெங்களூரில் கோலாகலம்

திருவள்ளுவர் தின விழா பெங்களூரில் கோலாகலம்


ADDED : ஜன 17, 2024 01:31 AM

Google News

ADDED : ஜன 17, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பெங்களூரில் திருவள்ளுவர் தின விழா நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், பல்வேறு அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்பினர், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி உற்சாகம் அடைந்தனர்.

திருவள்ளுவர் தின விழா ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரையில், திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள இடத்தில், திருவள்ளுவர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

நேற்று காலை, 8:00 மணி முதல், திருவள்ளுவர் தின விழா துவங்கியது. இந்த விழா தொடங்கியதும், சிவனடியார்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இணைந்து, முற்றோதல் என்ற பெயரில், 1,330 திருக்குறளை வாசிக்கும்நிகழ்ச்சி நடந்தது.திருக்குறளை ஆர்வத்துடன் படித்தனர்.

அதன்பின், திருவள்ளுவர் சிலைக்கு, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தாமோதரன், செயலர் சம்பத் தலைமையில், அந்த சங்கத்தினர் முதல் மாலை அணிவித்தனர். தேவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மணிகண்டன் தேவரும் பங்கேற்றார். அதன்பின், பொதுமக்கள் மாலை அணிவித்தனர்.

சகோதரத்துவம்


இதன்பின், கர்நாடகா பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, பெங்களூரு மத்திய தொகுதி பா.ஜ., - எம்.பி., மோகன், பெங்களூரு ஜெயநகர் தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, பெங்களூரு மத்திய மாவட்ட பா.ஜ., தலைவர் சப்தகிரி கவுடா ஆகியோர், திருவள்ளுவர் தின விழாவில் பங்கேற்றனர். திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்பின் விஜயேந்திரா பேட்டி அளிக்கையில், ''திருவள்ளுவர் தின விழாவில் பங்கேற்று, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

''பெங்களூரில் உள்ள திருவள்ளுவர் சிலையும், சென்னையில் உள்ள சர்வக்ஞர் சிலையும், கன்னடர்கள் - தமிழர்கள் இடையில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்துகிறது. எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, திருவள்ளுவர் சிலை இங்கு திறக்கப்பட்டது,'' என்றார்.

எம்.பி., செல்லகுமார்


காங்கிரஸ் சார்பில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி., செல்லகுமார், எம்.எல்.ஏ.,க்கள் சிவாஜிநகர் ரிஸ்வான் ஹர்ஷத், சாந்திநகர் ஹாரிஸ், புலிகேசி நகர் சீனிவாஸ், அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் பையப்பனஹள்ளி ரமேஷ்.

ஜெயநகர் முன்னாள் எம்.எல்.ஏ., சவுமியா ரெட்டி, ஹொய்சாளா நகர் முன்னாள் கவுன்சிலர் ஆனந்த்குமார், பெங்களூரு மத்திய மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரா, பாரதிநகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் சுபாஷ் ஆகியோர், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

கர்நாடக தி.மு.க., சார்பில் மாநில தி.மு.க., அவை தலைவர் பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விக்ரம், லியோ ராஜ், கட்சி உறுப்பினர்கள் சரவணா, அரவிந்த், கோபி, தன்ராஜ், சீனிவாஸ், உட்லைன்ஸ் கணேசன் கலந்து கொண்டனர். ஆதர்ஷ் ஆட்டோ சங்க தலைவர் சம்பத் மற்றும் ஆட்டோ டிரைவர்களும் பங்கேற்றனர்.

பொங்கலிட்டு உற்சாகம்


பல்வேறு தமிழ் சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்று, திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி உற்சாகம் அடைந்தனர்.

விழாவில் கலந்து கொண்டவர்கள், திருவள்ளுவர் சிலை முன்பு பொங்கலிட்டு உற்சாகம் அடைந்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை, அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் பையப்பனஹள்ளி ரமேஷ் செய்து இருந்தார். இந்த விழாவை நடத்த, ஒரு மாத காலமாக கடுமையாக உழைத்தார்.

விழாவிற்கு வரும்படி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். அவரது தீவிர முயற்சியால், திருவள்ளுவர் தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொம்மலாட்டம் உட்பட பல கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

விழாவில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோனோர், தமிழர் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் வேட்டி, சட்டை அணிந்து இருந்தனர்.

அமெரிக்க பெண்கள் உற்சாகம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் லாரன், தெரசா உட்பட மூன்று பெண்கள், பெங்களூரு எம்.ஜி., ரோட்டில் வசிக்கும், நண்பர்களை காண வந்து உள்ளனர். ஹலசூரில் திருவள்ளுவர் தின விழா நடப்பது பற்றி அறிந்ததும், நேற்று காலை அங்கு வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு அளிக்கப்பட்ட மரியாதையை கண்டு, உற்சாகம் அடைந்தனர்.பொம்மலாட்டத்தை கண்டு ரசித்தனர். செண்டை மேளத்துக்கு குத்தாட்டம் போட்டனர். திருவள்ளுவர் சிலை முன்பு, 'செல்பி' எடுத்து கொண்டனர். தமிழ் பெண்களுடன் சேர்ந்து, பொங்கலிட்டு மகிழ்ந்தனர். போலீஸ் அதிகாரிகள், பொதுமக்களுடன், 'செல்பி' எடுத்தனர். 'இந்தியா எங்களுக்கு மிகவும் பிடித்த நாடு. திருவள்ளுவரை பற்றி அதிகம் கேள்விப்பட்டு இருக்கிறோம்' என்று மகிழ்ச்சி ததும்ப கூறினர்.








      Dinamalar
      Follow us