UPDATED : ஜூன் 05, 2024 02:52 AM
ADDED : ஜூன் 04, 2024 08:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று(ஜூன் 05) காலை நடக்கிறது.
லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 04) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
இந்நிலையில் பிரதமர் தலைமையில் இன்று(ஜூன் 05) காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்தில் அடுத்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.