sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கட்டுக்கடங்காத கூட்டம்; தாக்குதல் நடத்தும் போலீஸ் சபரிமலையில் பக்தர்களின் பரிதவிப்பு தொடர்கிறது

/

கட்டுக்கடங்காத கூட்டம்; தாக்குதல் நடத்தும் போலீஸ் சபரிமலையில் பக்தர்களின் பரிதவிப்பு தொடர்கிறது

கட்டுக்கடங்காத கூட்டம்; தாக்குதல் நடத்தும் போலீஸ் சபரிமலையில் பக்தர்களின் பரிதவிப்பு தொடர்கிறது

கட்டுக்கடங்காத கூட்டம்; தாக்குதல் நடத்தும் போலீஸ் சபரிமலையில் பக்தர்களின் பரிதவிப்பு தொடர்கிறது


ADDED : ஜன 09, 2024 11:18 PM

Google News

ADDED : ஜன 09, 2024 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை:பெருவழிப்பாதை வழியாக சபரிமலைக்கு நடந்து வரும் பக்தர்கள் தரிசனத்திற்காக மீண்டும் 14 மணிநேரம் கியூவில் நின்று தளர்ச்சி அடைவதால் கேரள அரசு, தேவசம் போர்டுக்கு எதிராக கோஷமிடுகின்றனர்.

சில இடங்களில் கியூவில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் நடக்கிறது.

மகர ஜோதி தரிசனத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. சாலக்கயம், பம்பை வழியாக வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் பெருவழிப்பாதை வழியாக வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அழுதை, கரிமலை உள்ளிட்ட செங்குத்தான பாதைகளில் ஏறி இறங்கி தளர்ச்சியுற்று வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் வருவதற்கு மேலும் 14:00 மணி நேரம் கியூவில் நிற்க வேண்டியுள்ளது.

மரக் கூட்டத்தில் இருந்து சரங்குத்தி வரை 10:00 மணி நேரம் செட்டுகளில் அடைத்து போடப்படுகின்றனர். இங்கே இவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் என எந்த வசதியும் இல்லை.

பக்தர்கள் மீது தாக்குதல்


ஆவேசமடைந்த பக்தர்கள் கேரளா அரசு, தேவசம் போர்டிற்கு எதிராக கோஷமிடுகின்றனர். பொறுமை இழந்தவர்கள் கம்பி வேலிகளை உடைத்தும் அதன் மேல் ஏறியும் குறுக்குப் பாதைகளில் ஓடுகின்றனர்.

இவர்களை போலீசார் துரத்தி அடிக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் சன்னிதானம் அருகே யூ வளைவு பகுதியில் கியூவில் இருந்து வெளியேறிய பக்தர்களை போலீசார் தாக்கிய படங்கள் வெளியானது.

18 படியில் தனது குழந்தையுடன் வேகம் குறைவாக ஏறியதற்காக பெங்களூருவை சேர்ந்த ராஜேஷ் என்ற பக்தரை முதுகில் தாக்கிய சம்பவம் பற்றி விசாரணை நடத்த போலீசார் சன்னிதானம் எஸ்.பி., சுதர்சன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

18 படிகளில் பக்தர்களை ஏற்றும் பொறுப்பை மத்திய அரசின் அதிவிரைவு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேண்டுதலுடன் வரும் பக்தர்கள் மன உளைச்சலுடன் திரும்புகின்றனர்.

திணறும் போலீசார்


கட்டுக் கடங்காத கூட்டத்தால் போலீசார் செய்வதறியாது திணறுகின்றனர். ஜன. 13 வரை 80 ஆயிரம் பேரும் , ஜன.14-ல் 50 ஆயிரம் பேரும் ஜன.15-ல் 40 ஆயிரம் பேரும் தரிசனத்திற்முன் பதிவு செய்துள்ளனர். இதனால் ஜன. 14,15ல் கூட்டம் சற்று குறைய வாய்ப்புள்ளதாக போலீசார் நம்புகின்றனர்.

ஆனால் இன்று முதல் வரும் பக்தர்கள் மகரஜோதி தரிசனத்திற்கு சன்னிதானத்தில் தங்குவார்கள் என்பதால் நெரிசல் குறைய வாய்ப்பில்லை எனவும் மற்றொரு கணக்கீட்டில் தெரியவந்துள்ளது.

நிலைமையை எதிர்கொள்ள போலீசார் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சபரி மலையில் போலீசாரின் தன்னலமற்ற பணிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில போலீசார் தவறு செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சன்னிதானம் எஸ்.பி., தெரிவித்தார்.

18 படிகள் ஏறிய பின்னர் தரிசனத்திற்காக வரும் மேல்பாலத்தில் இருந்து சன்னதி முன் இறங்கி வரும் பாதையில் ஒரு தூண் உடைந்து விழுந்ததில் பத்துக்கு மேற்கும் பட்ட பக்தர்கள் கீழே விழுந்தனர். யாருக்கும் காயம் இல்லை.






      Dinamalar
      Follow us