பீன்யா - நாகசந்திரா இடையே 28 வரை மெட்ரோ ரயில் நிறுத்தம்
பீன்யா - நாகசந்திரா இடையே 28 வரை மெட்ரோ ரயில் நிறுத்தம்
ADDED : ஜன 26, 2024 07:10 AM
பெங்களூரு; நம்ம மெட்ரோவின், பீன்யா - நாகசந்திரா இடையே, இன்று முதல் மூன்று நாட்கள் மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து, பி.எம்.ஆர்.சி.எல்., வெளியிட்ட அறிக்கை:
பீன்யா - நாகசந்திரா இடையே, இன்று முதல், வரும் 28ம் தேதி வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து, தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. நாகசந்திராவில் இருந்து, மாதாவரா வரையிலான பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே மூன்று நாட்கள் மெட்ரோ ரயில் போக்குவரத்து இருக்காது.
வரும் 29ம் தேதி அதிகாலை 5:00 மணியில் இருந்து, வழக்கம் போன்று ரயில் போக்குவரத்து துவங்கும். மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள், துரிதமாக நடக்கின்றன.
நகரின் அனைத்து பகுதிகளுக்கும் இணைப்பு ஏற்படுத்தும் நோக்கில் பி.எம்.ஆர்.சி.எல்., பணிகளை விரைந்து நடத்துகிறது. அதேபோன்று, நாகசந்திரா - மாதாவரா வரையிலான பணிகள் நடக்கின்றன. இது முடிந்த பின், மாதாவரை மெட்ரோ ரயில் போக்குவரத்து இருக்கும்.
மெட்ரோ ரயில்களில், தினமும் 6.5 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதில் 80,000 முதல் ஒரு லட்சம் பயணியர், க்யூஆர் கோட் டிக்கெட் மூலம் பயணம் செய்கின்றனர். இது டிக்கெட் கவுன்டரின் அழுத்தம் குறைய காரணமாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

