வைஜெயந்தி மாலா, பத்மா சுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விஜயகாந்த்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு
வைஜெயந்தி மாலா, பத்மா சுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விஜயகாந்த்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு
ADDED : ஜன 26, 2024 01:12 AM

புதுடில்லி நம் நாட்டில், பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பு மற்றும் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன.
பிரபல நடிகையும், முன்னாள் எம்.பி.,யுமான வைஜெயந்திமாலா பாலி, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழகத்தை சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் உட்பட ஐந்து பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நடிகரும், தே.மு.தி.க., நிறுவனருமான மறைந்த விஜயகாந்த் உட்பட, 17 பேருக்கு பத்ம பூஷண் விருதும், தமிழகத்தைச் சேர்ந்த குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, எழுத்தாளர் ஜோடி குரூஸ், மருத்துவர் நாச்சியார், நாதஸ்வர இசைக் கலைஞர் சேஷம்பட்டி சிவலிங்கம், வள்ளி ஒயில் கும்மி ஆட்ட கலைஞர் பத்ரப்பன் உட்பட, 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டள்ளன. விருது பட்டியலில் 30 பேர் பெண்கள், எட்டு பேர் வெளிநாட்டினர். மறைவுக்கு பிறகான விருது ஒன்பது பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
விருது பெற்றோரின் முழுப்பட்டியல்:

