விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்
விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்
UPDATED : ஜூன் 10, 2025 12:28 AM
ADDED : ஜூன் 10, 2025 12:27 AM

திருவனந்தபுரம் : உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பலான எம்.எஸ்.சி., இரினா, கேரளாவின் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்திற்கு நேற்று வந்தது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில், அரபி கடலோரம் அதானி குழுமத்தின் சார்பில் விழிஞ்ஞம் துறைமுகம் உருவாக்கப்பட்டது. இத்துறைமுகத்திற்கு, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் நேற்று வந்தடைந்தது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தை சேர்ந்த, எம்.எஸ்.சி., இரினா என்ற கப்பல், விழிஞ்ஞம் துறைமுகத்தில் நேற்று நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.
நான்கு கால்பந்து மைதானங்களின் அளவுள்ள எம்.எஸ்.சி., இரினா கப்பல், 1,312 அடி நீளமும், 201 அடி அகலமும் உடையது. இக்கப்பல் ஒரே நேரத்தில், 4,80,000 டன் எடையுள்ள 24,346 கன்டெய்னர்களை சுமக்கும் திறன் உடையது.
இக்கப்பலை, கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த கேப்டன் வில்லி ஆன்டனி இயக்கி வருகிறார்.