ADDED : ஜன 17, 2024 01:27 AM
விஜயநகரா : திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காததால், விரக்தி அடைந்த இளைஞர் ஒருவர் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.
விஜயநகரா, கூட்லகியின், குடேகோட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் மதுசூதன், 26. இவர் இதே கிராமத்தில் வசிக்கும் இளம் பெண்ணை காதலித்தார்.
அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
ஆனால், மதுசூதனின் தந்தை, மனநலம் பாதித்தவர் போன்று நடந்து கொள்வதால், மதுசூதனுக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.
அதன்பின் பல இடங்களில், குடும்பத்தினர் இவருக்கு பெண் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இனி தனக்கு பெண் கிடைக்காது; திருமணம் நடக்காது. தனிமையில் வாழ வேண்டும் என நினைத்து, மதுசூதன் விரக்தி அடைந்தார்.
குடிப்பழக்கத்துக்கும் அடிமையானார். கடந்த வாரம் விஷம் குடித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

