sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மன அழுத்த ஆலோசனைக்கு யூடியூப் சேனல்

/

மன அழுத்த ஆலோசனைக்கு யூடியூப் சேனல்

மன அழுத்த ஆலோசனைக்கு யூடியூப் சேனல்

மன அழுத்த ஆலோசனைக்கு யூடியூப் சேனல்


ADDED : பிப் 29, 2024 11:21 PM

Google News

ADDED : பிப் 29, 2024 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன அழுத்த ஆலோசனைக்கு 'யு டியூப் சேனல்'

l சுகாதார சேவைகளை நவீனப்படுத்த 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இந்தாண்டுக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

l சுகாதார சேவைகளை நிர்வகிப்பதற்காக, 'பெங்களூரு சுகாதார கமிஷனர்' என்ற புதிய பதவி உருவாக்கப்படும். நகரின் அனைத்து விதமான சுகாதார சேவைகளும் அவரின் கீழ் கொண்டு வரப்படும்

l நகரின் 144 நகர ஆரம்ப சுகாதார மையங்கள்; 27 மகப்பேறு மருத்துவமனைகள்; 225 நம்ம கிளீனிக்குகள்; 7 மருத்துவமனைகள் 20 கோடி ரூபாயில் நிர்வகிக்கப்படும்

l 'ஒருங்கிணைந்த வலுவான ஆரோக்கியம்' என்ற பெயரில், அடுத்த 3 ஆண்டுகளில் சுகாதார சேவைகள் மேம்படுத்தப்படும். இந்தாண்டில், 27 இலவச பிசியோதெரபி மையங்கள் அமைக்கப்படும்.

'ஆரோக்கிய சாரதி' என்ற பெயரில், வீட்டு வாசலுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். 100 பரிசோதனை மையங்களில், 200 வெவ்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். 14 அதிநவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும். இதற்காக, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

l பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனை சுற்று வட்டாரங்களில், 200 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, அவர்களின் தாய்மார்கள் கூலி வேலைக்கு செல்லும் போது, குழந்தைகள் மேம்பாட்டு திட்டங்களுக்கு, 1 கோடி ரூபாய் வழங்கப்படும்

l மருத்துவர்கள் மூலம் மன அழுத்தத்துக்கு தீர்வு காணும் ஆலோசனைகள் வழங்குவதற்காக, 'மனோபிம்பா' என்ற யு டியூப் சேனல் துவங்கப்படும்

l 70 கோடி ரூபாயில், 50 புதிய இந்திரா உணவகங்கள் திறக்கப்படும். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலும் ஒரு உணவகம் திறக்கப்படும்

l 15 கோடி ரூபாயில், மின் மயானங்கள் மேம்படுத்தப்படும்

l தெரு நாய்கள் இன விருத்தியை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்படும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, 2 மண்டலங்களில் ஆரோக்கியமான இறைச்சி மையங்கள் அமைக்கப்படும். விலங்கு கழிவுகளை அப்புறப்படுத்த 4 மையங்கள் அமைக்கப்படும். இதற்கு, 10 கோடி ரூபாய் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us