sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

போலந்து உதவித்தொகை

/

போலந்து உதவித்தொகை

போலந்து உதவித்தொகை

போலந்து உதவித்தொகை


ஏப் 28, 2023 12:00 AM

ஏப் 28, 2023 12:00 AM

Google News

ஏப் 28, 2023 12:00 AM ஏப் 28, 2023 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளரும் நாடுகளில் மனிதவள திறன்களை மேம்படுத்துவதோடு, போலந்து மக்களிடையே சர்வதேச புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் யுனெஸ்கோ - போலந்து உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவிற்கான தேசிய ஆணையம் மற்றும் போலந்தின் கிராகோ நகரின் ஏ.ஜி.எச்., யுனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் உள்ள யுனெஸ்கோவிற்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியலுக்கான இருக்கை இந்த உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்துகின்றன. இதன்படி, வளரும் நாடுகளைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள் போலந்த்து நாட்டில் குறுகியகால உயர்கல்வி மேற்கொள்ள முடியும்.
உதவித்தொகை எண்ணிக்கை: 30
கால அளவு: 6 மாதங்கள்
பிரிவுகள்: அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் 
உதவித்தொகை விபரம்:
போலந்து அரசு வழங்கும் சலுகைகள்:* இலவச கல்விக் கட்டணம் மற்றும் பல்கலைக்கழகத்தின் இதர வசதிகள் இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 
* பி.எஸ்சி., மாணவர்களுக்கு சுமார் ரூ.30 ஆயிரமும், எம்.எஸ்சி., மாணவர்களுக்கு ரூ.43 ஆயிரமும் இருப்பிடம் மற்றும் இதர மாத செலவினங்களுக்கு வழங்கப்படுகிறது. இவை தவிர, அதே மதிப்பில் ஒரு முறை சிறப்பு உதவித்தொகையாகவும் வழங்கப்படுகிறது.
யுனெஸ்கோ வழங்கும் சலுகைகள்:தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தங்களது சொந்த நாட்டில் இருந்து போலந்து சென்று வருவதற்கான சர்வதேச பயண செலவினங்கள் மற்றும் காப்பீடு ஆகியவகிற்றை யுனெஸ்கோ ஏற்கிறது.
விண்ணப்பிக்கும் முறை: நான்கு பக்கங்கள் கொண்ட யுனெஸ்கோ விண்ணப்பப் படிவத்தை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றுகள், புகைப்படம் மற்றும் தேவையான இதர ஆவணங்களுடன் http://www.unesco.agh.edu.pl/en எனும் இணையதளத்தில் இ-பதிவு செய்ய வேண்டும். 
விபரங்களுக்கு: www.education.gov.in







      Dinamalar
      Follow us