sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

கலை அறிவியல் படிக்கலாம்!

/

கலை அறிவியல் படிக்கலாம்!

கலை அறிவியல் படிக்கலாம்!

கலை அறிவியல் படிக்கலாம்!


மே 17, 2023 12:00 AM

மே 17, 2023 12:00 AM

Google News

மே 17, 2023 12:00 AM மே 17, 2023 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும், இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முற்றிலும் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது.
அனைத்தும் ஆன்லைன்
விண்ணப்பப் பதிவு, விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்தல், விண்ணப்ப கட்டணம் செலுத்துதல், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தல் என மாணவர் சேர்க்கையின் அனைத்து நடைமுறைகளும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுவதால், மாணவர்கள் எந்த இடத்தில் இருந்து கொண்டும் அட்மிஷன் பெறலாம். 
ஒரே விண்ணப்பம் வாயிலாக பல்வேறு கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். இணையவசதி இல்லாத அல்லது உதவி தேவைப்படும் மாணவர்கள், நிர்ணயிக்கப்பட்ட அரசு கலை கல்லூரிகளில் அமைக்கபட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 
3 தரவரிசை பட்டியல் 
தங்களது விருப்பப்படி பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகளை மாணவர்கள் பதிவு செய்துகொள்ளலாம். மாணவர்களது 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளிப்படுகிறது. பொதுவாக, தமிழ், ஆங்கிலம் மற்றும் பொது என 3 விதமான தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. 
தமிழ் தரவரிசை பட்டியல் அடிப்படையில் பி.ஏ., -தமிழ் இலக்கியம் மற்றும் பி.லிட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல், ஆங்கில தரவரிசை பட்டியல் அடிப்படையில், பி.ஏ., - ஆங்கில இலக்கிய படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.  மீதமுள்ள 4 பாடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் பொது தரவரிசை பட்டியல் வாயிலாக பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.டபிள்யு போன்ற படிப்புகளுக்கான சேர்க்கை நடத்தப்படும்.
இட ஒதுக்கீடு
மாணவர்கள் பதிவு செய்த பாடப்பிரிவுகளின் விருப்ப வரிசையின் அடிப்படையில், தரவரிசைக்கு ஏற்ப இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒதுக்கீட்டு ஆணை அந்தந்த கல்லூரிகளால் வழங்கப்படும். தமிழக அரசின் ஆணையின்படி, இட ஒதுக்கீட்டு முறை மற்றும் சலுகைகள் உண்டு. 
விண்ணப்பிக்கும் முறை: www.tngasa.in எனும் இணையதளம் வாயிலாக தேவையான சான்றிதழ்களுடன் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ஒவ்வொரு 5 கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணம் ரூ. 50 செலுத்தவேண்டும். எஸ்.சி.., எஸ்.டி., பிரிவினர் ரூ.2 செலுத்தினால் போதும்.
விபரங்களுக்கு: இணையதளம்: www.tngasa.inஇ-மெயில்: tngasa2023@gmail.comதொலைபேசி: 18004250110, 044-28271911, 28260098







      Dinamalar
      Follow us