sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

அறிவோம் பி.டி.எஸ்.,

/

அறிவோம் பி.டி.எஸ்.,

அறிவோம் பி.டி.எஸ்.,

அறிவோம் பி.டி.எஸ்.,


ஜூலை 21, 2023 12:00 AM

ஜூலை 21, 2023 12:00 AM

Google News

ஜூலை 21, 2023 12:00 AM ஜூலை 21, 2023 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, அடுத்தபடியாக பெரும்பாலான மாணவர்களின் தேர்வாக இருப்பது பி.டி.எஸ்., எனப்படும் இளநிலை பல் மருத்துவம் படிப்பு. 
முக்கியத்துவம்இப்படிப்பு, பல் சொத்தையை சரி செய்தல், ஈறு பிரச்சனைகள், வாயிலுள்ள திசுக்களின் நோய்களை கண்டறிதல், பற்களுக்கு கேப் போடுதல், செயற்கை பற்களை பொருத்துதல், வாய் அறுவை சிகிச்சை, தாடை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைகளை கொண்டது. நான்கு ஆண்டு கல்லூரி படிப்புடன், ஓர் ஆண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சி என ஐந்து ஆண்டு கால படிப்பாக வழங்கப்படுகிறது. பல் நிபுணர்கள் பல வகையான உபகரணங்களை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்கின்றனர். தொழில்நுட்ப வளரச்சியின் பலனாக இந்த உபகரணங்கள் அதி நவீன வளர்ச்சி பெற்றுள்ளது. 
கல்வித்தகுதிகள்: 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் பி.டி.எஸ்., படிப்பில் சேர தகுதியுடையவர்கள்.
வாய்ப்புகள்:* பல் மருத்துவர்* பல் அறுவை சிகிச்சை நிபுணர்                                          * பேராசிரியர்* பல் மருத்துவ ஆலோசகர்* பல் மருத்துவர்களின் உதவியாளர்* பல் சுகாதார நிபுணர்கள்* சமூக பல் சுகாதார நிபுணர்* ஒப்பனை பல் மருத்துவர்* பல் மருத்துவ ஆய்வகங்களில் தொழில்நுட்ப வல்லுநர்கள்
தகுதியும், திறமையும் உள்ள பல் மருத்துவர்களுக்கு அதிக தேவை உள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் அதிக வாய்ப்புகள் உள்ளன. சில ஆண்டுகால அனுபவத்திற்கு பிறகு, சுயமாகவும் கிளினிக்குளை துவங்கலாம். கற்பிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் பேராசிரியர் ஆகலாம். கல்வித்துறையில் பணிபுரிய விரும்பினால், முதுநிலை படிப்பை மேற்கொள்வது சாதகமாக இருக்கும். 
வெளிநாட்டில் பணிபுரிய விரும்புவோருக்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா போன்ற நாடுகளில் வாய்ப்புகள் உள்ளன. வாய் ஆரோக்கியம் மற்றும் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பல் மருத்துவர்களுக்கு அதிக தேவை உள்ளது. பல் மருத்துவராக மாறுவதற்கான பாதை கடினமானது அல்ல. அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கும் மாணவர்கள், பல் மருத்துவப் படிப்பில் சேர ஆர்வமுள்ளவராக இருக்கும்பட்சத்தில், ஐந்தாண்டு கால பி.டி.எஸ்., படிப்பை தேர்வு செய்யலாம்.
இதர பல் மருத்துவ படிப்புகள்:* பி.எஸ்சி., பல் தொழில்நுட்பம் * பல் மருத்துவ உதவியாளர் டிப்ளமா* பல் சுகாதாரத்தில் டிப்ளமா * பார்மசி டெக்னீஷியன்* பல் புகைப்படம் எடுத்தலில் சான்றிதழ் படிப்பு 







      Dinamalar
      Follow us