ஆக 14, 2023 12:00 AM
ஆக 14, 2023 12:00 AM
வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரானிக்ஸ் துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய 4 ஆண்டு பி.எஸ்.,- எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வாயிலாக வழங்கப்பட உள்ள இப்படிப்பில் 12ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் படித்த எந்த மாணவரும் சேரலாம். நாடு முழுவதிலும் இருந்து 1,800 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களில், 1200 பேர் வழக்கமான நுழைவு அடிப்படையிலும், மீதமுள்ளவர்கள் ஜே.இ.இ., நுழைவு தேர்வு அடிப்படையிலும் விண்ணப்பித்துள்ளனர்.
இப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்கள், பல்வேறு துறைகளில் எலக்ட்ரானிக் சிஸ்டம் டிசைனர், எம்பெட்டடு சிஸ்டம் டெவலப்பர், எலக்ட்ரானிக் ஹார்டுவேர் ஸ்பெஷலிஸ்ட், சிஸ்டம் டெஸ்டங் இன்ஜினியர், எலக்ட்ரானிக்ஸ் ரிசர்ச் இன்ஜினியர் ஆகிய பணிவாய்ப்பை பெறலாம் எனவும் சென்னை ஐ.ஐ.டி., குறிப்பிட்டுள்ளது.

