தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி; தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு விருது!

தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி; தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு விருது!

தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி; தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு விருது!


UPDATED : செப் 05, 2025 12:00 AM

ADDED : செப் 05, 2025 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2025 12:00 AM ADDED : செப் 05, 2025 04:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
கல்வியில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

ஆசிரியராக பணியாற்றி, ஜனாதிபதியாக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணனை கவுரவிக்கும் விதமாக, அவரது பிறந்த நாளான செப்., 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாளில், கல்வியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி, மத்திய அரசு கவுரவிப்பது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு, தமிழகத்தில் இருவர், புதுச்சேரியில் ஒருவர் உட்பட 45 ஆசிரியர்கள், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், டில்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

சென்னை, மயிலாப்பூரில் உள்ள, பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள, பாரதியார் நுாற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us