கற்றல், கற்பித்தலில் மாற்றம் செய்ய பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவு
கற்றல், கற்பித்தலில் மாற்றம் செய்ய பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவு
UPDATED : மார் 31, 2025 12:00 AM
ADDED : மார் 31, 2025 09:18 PM

சென்னை:
நாட்டின் புதிய கல்விக் கொள்கையின்படி, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்களில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பாக வெளியிட்டுள்ள நெறிமுறைகளை, பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்களில், புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப, மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படியே, இந்த ஆண்டு புத்தகங்களில் பாடங்கள் இடம் பெறுகின்றன.
புதிய மாற்றங்களின் விபரம், புத்தகங்களின் துவக்க பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. அவற்றை பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அதாவது, பாட வாரியான உள்ளடக்கம், கற்றல் முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள், மதிப்பீட்டு கட்டமைப்புகள் போன்றவை, அந்த பக்கங்களில் விளக்கப்பட்டுஉள்ளன.
அதன்படி, மாணவர்கள் கற்றதை விளக்கும் வகையில், அனுபவ ரீதியிலான கற்பித்தல் முறையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்த அறிவுரைகள், www.cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.