Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பள்ளி மாணவர்களுக்கு முட்டை, வாழைப்பழம்

பள்ளி மாணவர்களுக்கு முட்டை, வாழைப்பழம்

பள்ளி மாணவர்களுக்கு முட்டை, வாழைப்பழம்


UPDATED : ஜூன் 03, 2024 12:00 AM

ADDED : ஜூன் 03, 2024 10:10 PM

Follow on Google

UPDATED : ஜூன் 03, 2024 12:00 AM ADDED : ஜூன் 03, 2024 10:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கர்நாடகாவில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மதிய உணவுடன், முட்டை, வாழைப்பழம், கடலை மிட்டாய் வழங்கும்படி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறார்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் நோக்கில், அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு மதிய உணவு, வேகவைத்த முட்டை வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு, வாழைப்பழம் அல்லது கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டு பள்ளிகள் திறந்துள்ளன. மாணவ - மாணவியருக்கு முட்டை, வாழைப்பழம், கடலை மிட்டாய் வழங்க வேண்டும். 2024 ஜூன் முதல் 2025 வரை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
வாரந்தோறும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் முட்டை, வாழைப்பழம் அல்லது கடலை மிட்டாய் வழங்க வேண்டும். ஒருவேளை செவ்வாய், வியாழன் விடுமுறை இருந்தால், மறுநாள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap