sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஜாம் - 2025

/

ஜாம் - 2025

ஜாம் - 2025

ஜாம் - 2025


UPDATED : அக் 05, 2024 12:00 AM

Google News

UPDATED : அக் 05, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாட்டில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் அறிவியல் துறை சார்ந்த முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற எழுதவேண்டிய தேர்வு, 'ஜாம்' எனும் 'ஜாயிண்ட் அட்மிஷன் டெஸ்ட்'!

படிப்புகள்:

எம்.எஸ்சி.,
எம்.எஸ்சி.,- தொழில்நுட்பம்
எம்.எஸ்., - ஆராய்ச்சி
எம்.எஸ்சி., - எம்.டெக்., இரட்டை பட்டப்படிப்பு
ஜாயிண்ட் எம்.எஸ்சி., - பிஎச்.டி.
எம்.எஸ்சி., - பிஎச்.டி., இரட்டை பட்டப்படிப்பு

கல்வி நிறுவனங்கள்: 2025-26ம் கல்வி ஆண்டில் நாடு முழுவதிலும் உள்ள 22 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-களில் வழங்கப்படும் 89 முதுநிலை பட்டப்படிப்புகளில் உள்ள 3,000 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, இத்தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது.

மேலும், ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., டி.ஐ.ஏ.டி., ஐ.ஐ.இ.எஸ்.டி., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,-புனே மற்றும் போபால், ஐ.ஐ.பி.இ., ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர்., எஸ்.எல்.ஐ.இ.டி., ஆகிய கல்வி நிறுவனங்களில் உள்ள 2,300 இடங்களும் ஜாம் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

தகுதி:
2025ம் ஆண்டில் உரிய துறைகளில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்பவர்கள், இத்தேர்வு எழுதலாம். வயது வரம்பு இல்லை.

தேர்வு தாள்கள்:
பயோடெக்னாலஜி, கெமிஸ்ட்ரி, எக்னாமிக்ஸ், ஜியோலஜி, மேத்மேடிக்கல் ஸ்டேடிஸ்டிக்ஸ், மேத்மெடிக்ஸ், பிசிக்ஸ் ஆகிய ஏழு பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

தேர்வு மையங்கள்:
இந்தியா முழுவதும் சுமார் 100 நகரங்களில் இத்தேர்விற்கான மையங்கள் அமைக்கப்படுகின்றன.

சேர்க்கை முறை: தேர்வில் பாடம்வாரியாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேசிய அளவிலான தரவரிசை தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 11

தேர்வு நாள்:
பிப்ரவரி 2, 2025

விபரங்களுக்கு:
https://jam2025.iitd.ac.in/







    • Dinamalar Events


    Dinamalar