Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கண்காட்சியில் தினமலர் - பட்டம் இதழ் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்

கண்காட்சியில் தினமலர் - பட்டம் இதழ் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்

கண்காட்சியில் தினமலர் - பட்டம் இதழ் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்


UPDATED : ஜன 03, 2024 12:00 AM

ADDED : ஜன 03, 2024 10:11 AM

Follow on Google

UPDATED : ஜன 03, 2024 12:00 AM ADDED : ஜன 03, 2024 10:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு புத்தக திருவிழாவில், தினமலர் நாளிதழின் பட்டம் இதழை அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து, ஐந்தாவது ஆண்டாக புத்தக திருவிழாவை நடத்தி வருகிறது.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகில் உள்ள அலிசன்காசி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நாளை வரை நடக்கிறது. கண்காட்சியில், 80 அரங்குகளில், லட்சக்கணக்கான நுால்கள் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களை, பேருந்துகளில் அழைத்துவர, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து நிர்வாகம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த வாகனங்களில், அரசு பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் வந்தனர். அவர்கள், 100 ரூபாய் டோக்கன் பெற்று, புத்தகங்களை வாங்கி சென்றனர்.தினமலர் நாளிதழ் விற்பனை நிலையம் அமைந்துள்ள 21வது அரங்கில், அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டம் இதழ் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், நலம் இனி நம் சூழல் தேடல் என்ற தலைப்பில் டாக்டர் சிவராமன், ஊக்கமது கைவிடேல் என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் ஆகியோர் பேசினர்.இன்று, ஏழாம் நாள் விழாவிற்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமை வகிக்கிறார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் பரிசுகள் வழங்குகிறார்.மேலும், படைப்பின் வெற்றியை தீர்மானிப்பவர் படிப்பவரே... படைப்பவரே! என்ற தலைப்பில், பட்டிமன்ற நடுவர் சுகிசிவம் பேசுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap