தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு மாணவ, மாணவியர் உற்சாகம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு மாணவ, மாணவியர் உற்சாகம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு மாணவ, மாணவியர் உற்சாகம்


UPDATED : மார் 27, 2026 06:35 PM

ADDED : மார் 27, 2026 06:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2026 06:35 PM ADDED : மார் 27, 2026 06:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு கடந்த, 2ல் தொடங்கி நடந்து வந்தது. அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 23ல் நிறைவடைந்தது.

பிற பாடப்பிரிவு மாணவர்களுக்கான கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிரி வேதியியல், தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நேற்று நடந்தன. இத்துடன் பிளஸ் 2 அனைத்து மாணவர்களுக்கும் நேற்று தேர்வு முடிந்தது.

கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, 47 தேர்வு மையங்களில் நடந்தது. இதில், 4,695 மாணவர்கள், 5,483 மாணவியர், 173 தனித்தேர்வர் என மொத்தம், 10,351 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியதையொட்டி மாணவ, மாணவியர் உற்சாகமாக துள்ளி குதித்தனர்.

சில மாணவ, மாணவியர் பள்ளி பருவம் முடிந்ததால், பிரிவை நினைத்து கண்ணீர் சிந்தியதையும் பார்க்க முடிந்தது. பின், தேர்வு மையத்தை விட்டு வெளியே சென்ற மாணவர்கள் தங்களது நண்பர்களுடனும், மாணவியர் தங்களது தோழியருடன் கேக் வெட்டி கொண்டாடி, மொபைல் போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us