புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., இடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., இடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு
UPDATED : ஜூன் 15, 2026 06:23 PM
ADDED : ஜூன் 15, 2026 06:25 PM
புதுச்சேரி:
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 2026 - 27ம் கல்வியாண்டிற்கான 221 பி.எச்.டி., சேர்க்கை இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
https://ptuniv.edu.in என்ற ஆன்லைன் மூலம் வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த சேர்க்கை இரண்டு கட்டங்களைக் கொண்டது. ஒன்று நுழைவுத் தேர்வு; மற்றொன்று நேர்காணல். நுழைவுத் தேர்வு ஜூலை 11ம் நடக்க உள்ளது.
இதில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 22 முதல் 24 வரை நேர்காணல் நடத்தப்படும். கேட், யூ.ஜி.சி., நெட், ஜே.ஆர்.எப்., போன்ற தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நுழைவு தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் நேர்காணலில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.2,000, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.1,000 செலுத்த வேண்டும். பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் மு னைவர் பட்டத்திற்கான இடங்கள் உள்ளன.
குறிப்பாக, சிவில் இன்ஜினியரிங் துறையில் 9 இடங்கள், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறையில் மொத்தம் 36 இடங்கள் உள்ளன. எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் துறையில் 15 இடங்கள், கணினி அறிவியல் துறையில் மொத்தம் 32 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கணினி அறிவியல் பிரிவில் 4 இடங்கள், மெக்கானிக்கல் இன்ஜினி யரிங் துறையில் 17 இடங்கள் உள்ளன. தகவல் தொழில்நுட்பம் துறையில் 44 இடங்கள், வேதியியல் பொறியியல் துறையில் 48 இடங்கள், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன் துறையில் 16 இடங்கள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 50 சதவீத மதிப்பெண்கள் போதும். தொலைதுாரக் கல்வி அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
சேர்க்கையில் மொத்தம் உள்ள இடங்களில் 75 சதவீதம் புதுச்சேரி மாணவர்களுக்கும், மீதமுள்ள 25 சதவீதம் இடங்கள் பிற மாநில அல்லது யூனியன் பிரதேச மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
