Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு இ - மெயில் முகவரி உருவாக்கி தர உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு இ - மெயில் முகவரி உருவாக்கி தர உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு இ - மெயில் முகவரி உருவாக்கி தர உத்தரவு


UPDATED : ஆக 08, 2025 12:00 AM

ADDED : ஆக 08, 2025 06:53 PM

Follow on Google

UPDATED : ஆக 08, 2025 12:00 AM ADDED : ஆக 08, 2025 06:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு இ - மெயில் முகவரி உருவாக்கி தர ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழக திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இணையதள சான்றிதழ் படிப்பு, உயர்கல்வி போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், உயர் கல்விக்கு விண்ணப்பித்தல் என, அனைத்து செயல்பாடுகளுக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே இ - மெயில் முகவரி தேவைப்படுகிறது.

இதனால், கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில், 9 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, இ - மெயில் முகவரி உருவாக்க உதவி செய்யும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து நடப்பாண்டில், ஒன்பதாம் வகுப்பு வந்துள்ள மாணவ - மாணவியருக்கும், கடந்த ஆண்டு இ - மெயில் உருவாக்காத, 10 முதல், பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கும், பள்ளியிலேயே இ - மெயில் முகவரி உருவாக்கித்தர உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த முகவரியை, எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யவும், இ - மெயில் பயன்படுத்துவது குறித்து விளக்கத்தை கற்றுத்தரவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap