தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி பயிற்சி

பள்ளி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி பயிற்சி

பள்ளி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி பயிற்சி


UPDATED : பிப் 23, 2026 03:37 PM

ADDED : பிப் 23, 2026 03:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 23, 2026 03:37 PM ADDED : பிப் 23, 2026 03:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை துாண்டும், 'இஸ்ரோ யுவிகா' பயிற்சி திட்டத்திற்கு, மார்ச் 31க்குள் விண்ணப்பிக்கலாம்.

எதிர்காலத்தில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில், நாட்டை வளர்ச்சியடையச் செய்யும் வகையில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், 'இஸ்ரோ யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

இதில், விண்வெளி அறிவியல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும், 27ம் தேதி முதல், மார்ச் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அவர்களின் எட்டாம் வகுப்பு மதிப்பெண், 'ஆன்லைன்' வழியில் நடத்தப்படும் வினாடி வினா மதிப்பெண் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தேர்வு பட்டியல், ஏப்., 13ல் வெளியிடப்படும். மே 11 முதல் 22ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

நாடு முழுதும் உள்ள இஸ்ரோ மையங்களில், இந்த பயிற்சி வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us