தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/ப்ரீமியம்/வி.சி.,க்கள் இல்லாமல் தி.மு.க., வெல்ல முடியாதா?

வி.சி.,க்கள் இல்லாமல் தி.மு.க., வெல்ல முடியாதா?

வி.சி.,க்கள் இல்லாமல் தி.மு.க., வெல்ல முடியாதா?


ADDED : செப் 25, 2024 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''அமைச்சர் உதயநிதியை விமர்சிப்பதை கட்சி ஏற்றுக் கொள்ளாது. தனிநபர்களை விமர்சிப்பதை ஆதரிக்கவும் செய்யாது. அதேசமயம், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் நிலைப்பாடு,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னியரசு கூறினார்.

அவரது பேட்டி:


தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, 2021ம் ஆண்டின் சட்டசபை தேர்தலை சந்தித்தன. பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகளை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இத்தனை கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தோம்.

வட மாநிலங்களில், பா.ஜ., ஆட்சியைப் பிடித்த சூழலில், தமிழகத்தில் அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தி.மு.க., கூட்டணியில் இணைந்தோம்.

எங்களுக்கு 6 தொகுதிகளை கொடுத்தாலும், இடங்கள் முக்கியமல்ல, இலக்கு தான் முக்கியம் என, சேர்ந்தோம். நாங்கள் பெற்ற வெற்றிக்கு, தி.மு.க.,வின் ஓட்டு மட்டுமல்லாது, கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளும் காரணம். இது எங்களுக்கு மட்டுமல்ல, கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.

நாங்கள் இல்லாமல் வெற்றி பெற முடியாது என சொல்வது கூட்டுமுயற்சியின் பின்னடைவாகத்தான் பார்க்க முடியும். ஒரு கூட்டணி அமைத்து, புரிந்துணர்வு ஏற்பட்டு ஓட்டுகளைப் பெற்று இருக்கிறோம். எனவே, விடுதலை சிறுத்தைகளின் வெற்றியில், இடதுசாரிகளின் பங்கு இருக்கிறது. தி.மு.க.,வின் வெற்றியில் வி.சி., பங்கு இருக்கிறது. இந்த வெற்றி என்பது எல்லாரும் சேர்ந்து எடுத்த வெற்றியாகத்தான் பார்க்கிறோம்.

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது கட்சியின் இலக்கு. எங்கள் கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு விரும்புகிறோம். திருமாவளவன் முதல்வராக வர வேண்டும் என்ற அடிப்படையில் தான் கட்சியை துவக்கியுள்ளோம். அந்த அடிப்படையில் தான் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்ற, கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., கூட்டணியில் தான் தொடர்கிறோம். திருமாவளவனும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். வடமாவட்டங்களில் வி.சி., இல்லாமல் தி.மு.க., வெல்ல முடியாது என, எங்கள் கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து ஏற்புடையதல்ல. அது அவருடைய சொந்தக் கருத்து. அமைச்சர் உதயநிதியை அவர் விமர்சித்ததையும் கட்சி ஏற்றுக்கொள்ளாது. தனிநபர்களை விமர்சிப்பதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

அதேநேரத்தில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது கட்சியின் கோட்பாடு, நிலைப்பாடு. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us