தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/செய்திகள்/ப்ரீமியம்/தேங்காய் எண்ணெய் விலை இப்போதைக்கு குறையாது: தேங்காய் உற்பத்தி குறைவே காரணம்

தேங்காய் எண்ணெய் விலை இப்போதைக்கு குறையாது: தேங்காய் உற்பத்தி குறைவே காரணம்

தேங்காய் எண்ணெய் விலை இப்போதைக்கு குறையாது: தேங்காய் உற்பத்தி குறைவே காரணம்

6


ADDED : ஏப் 27, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

6

ADDED : ஏப் 27, 2026 05:40 AM


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ''தேங்காய் உற்பத்தி பாதியாக குறைந்து இருப்பதால், தேங்காய் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு இல்லை,'' என, கோவை மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு உணவு பொருட்களின் விலையும் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதில்லை. சந்தையை பொறுத்தவரை பொருட்களின் விலை ஏறுவதும், இறக்குவதும் இயல்பானது.

2024ம் ஆண்டு திடீரென தேங்காய் எண்ணெய் விலை லிட்டர், 200 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்ந்தது. அதன் பிறகு 500 ரூபாயாக உயர்ந்து, இப்போது லிட்டர் 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கொப்பரை விலை கிலோ 90 ரூபாயிலிருந்து, 180 ரூபாயாக உயர்ந்ததே தேங்காய் எண்ணெய் விலை இருமடங்காக உயர காரணம் என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் தேங்காய் விளைச்சல், 40 சதவீதம் வரை குறைந்து இருப்பதால், கொப்பரை தேங்காய் உற்பத்தி, 75 சதவீதமாக குறைந்து விட்டதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

'தென்னை விவசாயம் செய்வதில் விவசாயிகளுக்கு ஆர்வம் இல்லை. புதிதாக தென்னை விவசாயத்துக்கு வருபவர்கள் மகசூல் எடுக்க, 7 முதல் 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி உள்ளது' என்கின்றனர் எண்ணெய் உற்பத்தியாளர்கள்.



கோவை மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர் கூறியதாவது: இன்று தேங்காய் எண்ணெயின் தேவை அதிகரித்து உள்ளது. ஆனால் தேங்காய் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. அதனால் தேங்காய் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு இல்லை.

தமிழகத்தை பொறுத்தவரை தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்க்க மட்டும்தான் பயன்படுத்தி வந்தனர். இப்போது கேரளம் போல, சமையலுக்கும் அதிகம் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

காஸ்மெடிக் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கேரளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேங்காய் மகசூல் குறைந்து விட்டது. அதனால்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இப்போது கொப்பரைக்கு நல்ல விலை கிடைப்பதால், தென்னை விவசாயத்தில் விவசாயிகளுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

இப்போது தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர், 400 முதல் 480 ரூபாய்க்கும், பிரீமியம் தரம் லிட்டர் 500 முதல் 600 ரூபாய்க்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us