புதிய பெயரில் முளைக்கும் பயங்கரவாத அமைப்பு; தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., குறித்து விசாரணை
புதிய பெயரில் முளைக்கும் பயங்கரவாத அமைப்பு; தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., குறித்து விசாரணை
UPDATED : செப் 08, 2025 12:20 PM
ADDED : ஜூலை 05, 2025 02:51 AM

சென்னை : தடை செய்யப்பட்ட, பி.எப்.ஐ., எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர், வெவ்வேறு பெயர்களில் பயங்கரவாத அமைப்புகளை துவங்கி வருவதால் அவர்களுக்கான நிதி ஆதாரங்கள் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
2022ல் தேச விரோத செயலில் ஈடுபட்டதாக, பி.எப்.ஐ., எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளைகளான, ஆர்.ஐ.எப்., - ரிஹாப் இந்தியா பவுண்டேஷன், சி.எப்.ஐ., - கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா, ஏ.ஐ.ஐ.சி., - அனைத்து இந்திய இஸ்லாமிக் கவுன்சில் என்ற அமைப்புகளுக்கு, மத்திய அரசு தடை விதித்தது. என்.சி.ெஹச்.ஆர்.ஓ., - தேசிய மனித உரிமைக்கான கூட்டமைப்பு, தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் பிரன்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பட்டியல் தயாரித்து தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்பாது, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளில் நிர்வாகிகளாக இருந்தவர்கள், வெவ்வேறு பெயர்களில் பயங்கரவாத அமைப்புகளை துவங்கி வருவதாக புகார்கள் வந்துள்ளன.
இதுகுறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த பிப்ரவரியில்,தஞ்சாவூரில் ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற அமைப்புக்குஆள் சேர்த்து, பயங்கரவாத பயிற்சி அளித்த மன்னை பாவா என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்பினர், புதிய பெயர்களில் பயங்கரவாத அமைப்புகளை துவங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
எங்களின் விசாரணையிலும், அவர்கள் கல்லுாரி மாணவர்களை மூளைச்சலவை செய்து வருவதுதெரியவந்தது.
புதிய பெயர்களில் பயங்கரவாத அமைப்புகள் துவங்க நிதியுதவி செய்து வரும் நபர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. பயங்கரவாத அமைப்புகள் துவங்கப்படுவதற்கான தொடர் சங்கிலியை துண்டித்துஉள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.