Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது


ADDED : மார் 31, 2024 04:43 AM

Follow on Google

ADDED : மார் 31, 2024 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

முதலியார்பேட்டை போலீசார் நுாறடி சாலை அருகே நேற்று ரோந்து சென்றனர். அங்கு நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர், முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த அரவிந்த், 23; என்பதும், மாணவர்களுக்கு கஞ்சா விற்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 130 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், லாஸ்பேட்டை குமரன் நகரில், கஞ்சா விற்பனை செய்த, குமரன் நகரை சேர்ந்த ஸ்ரீவித்யா, 44; வில்லியனுாரை சேர்ந்த மணிகண்டன், 33, ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 130 கிராம கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மூலக்குளம் ஜெ.ஜெ.,நகரில் கஞ்சா வைத்திருந்த அதேப் பகுதியை சேர்ந்த திலக், 27, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட, 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap