/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
6 பேரிடம் ரூ. 5.42 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
/
6 பேரிடம் ரூ. 5.42 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
6 பேரிடம் ரூ. 5.42 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
6 பேரிடம் ரூ. 5.42 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
ADDED : ஜூன் 08, 2024 04:21 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 6 பேரிடம் 5.42 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுாரை சேர்ந்தவர் கணேசன். இவரை 'வாட்ஸ் ஆப்'பில் தொடர்பு கொண்ட நபர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார்.
அதை நம்பி அவர், 2.92 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். அதேபோல், கோரிமேடு பகுதியை சேர்ந்த மனோஜ்குமாரும், 70 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
புதுச்சேரியை சேர்ந்த பிரசாந்த் என்பவரை தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி, 86 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.
உருளையன்பேட்டையை சேர்ந்த சவுமியாவை தொடர்பு கொண்ட நபர், விமான நிலையத்தில் வேலை உள்ளது.
அதற்கு முன்பணம் அனுப்ப வேண்டும் என, கூறினார். அதைநம்பி, அவர், 38 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.
புதுச்சேரியை சேர்ந்த சங்கரை தொடர்பு கொண்ட மர்ம நபர் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என கூறினார். அதை நம்பி, 13 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த நடராஜன் இவர், வங்கி மூலம் சலுகைகள் பெற, ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்து, வங்கி விபரங்களை பதிவு செய்தார். நில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து 43 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
இது குறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.