/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் சிறப்பு கருத்தரங்கம் 80 மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு
/
அரசு மருத்துவமனையில் சிறப்பு கருத்தரங்கம் 80 மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு
அரசு மருத்துவமனையில் சிறப்பு கருத்தரங்கம் 80 மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு
அரசு மருத்துவமனையில் சிறப்பு கருத்தரங்கம் 80 மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 30, 2024 05:01 AM

புதுச்சேரி : இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் நடந்த சிறப்பு கருத்தரங்கில் 80க் கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி, இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தின் காது, மூக்கு, தொண்டை பிரிவு மற்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அங்கீகாரத்துடன் குறட்டை , துாக்கத்தில் ஏற்படும் சுவாசக்கோளாறு பிரச்னை குறித்த கருத்தரங்கம் மற்றும் சிகிச்சை செய்முறைகள் பற்றிய விளக்கக்கூட்டம் நடந்தது.
சிறப்பு அழைப்பாளர்களாக மெட்ராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்பு ஆலோசகர் விஜய் கிருஷ்ணன், ஜிப்மர் காது, மூக்கு, தொண்டை பிரிவின் துறை தலைவர் சிவராமன், வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லுாரி துறை தலைவர் பிரபு, மகாத்மா காந்தி மருத்துவக்கல்லுாரி துறை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதுமட்டுமின்றி, ராஜிவ்காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை நல டாக்டர் ரவிக்கண்ணன்; புதுச்சேரியை சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் கலையரசி, சிவசங்கர், தனமாலினி, மற்றும் ரோஷினி உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கில், புதுச்சேரி அரசு மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் டாக்டர்களை கவுரவித்தார். நிகழ்ச்சியில் குறட்டை மற்றும் துாக்கத்தின் போது ஏற்படும் மற்ற பிரச்னைகளுக்கான சிறப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது. அரசு மருத்துவமனையின் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி சமீம் பேகம், குறை தீர்ப்பு அதிகாரி ரவி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாபன் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை காது, மூக்கு, தொண்டை துறை தலைவர் ஸ்டாலின் சிவகுருநாதன் மற்றும் காது, மூக்கு, தொண்டை பிரிவு டாக்டர்கள் செய்திருந்தனர்.