ADDED : ஜூலை 13, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி, நைனியப்பபிள்ளை வீதியை சேர்ந்தவர் நாகலிங்கம்; அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடையில் இருந்த இவரது மனைவி லாவண்யாவை, நாகலிங்கத்தின் சகோதரர் கருணாகரன் அவதுாராக பேசி தாக்கினார்.
இதுபற்றி, அவர் ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.