/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவனை வேலைக்கு அமர்த்திய தனியார் நிறுவனம் மீது வழக்கு
/
சிறுவனை வேலைக்கு அமர்த்திய தனியார் நிறுவனம் மீது வழக்கு
சிறுவனை வேலைக்கு அமர்த்திய தனியார் நிறுவனம் மீது வழக்கு
சிறுவனை வேலைக்கு அமர்த்திய தனியார் நிறுவனம் மீது வழக்கு
ADDED : ஜூன் 09, 2024 04:07 AM
புதுச்சேரி : மூலக்குளம் பகுதியில் 13 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய தனியார் நிறுவனம் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி மூலக்குளம் ரங்கா நகரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி தொழிலாளர் துறைக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று அந்நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், நிறுவனத்தில் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவர் வேலை செய்து வருவது தெரியவந்தது.
குழந்தைகள் வேலை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி நிறுவன உரிமையாளர் ரத்தினகுமார் மீது ராஜ்குமார் ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.