/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொழுதுபோக்கு மையமாக மாறிய துறைமுகம்
/
பொழுதுபோக்கு மையமாக மாறிய துறைமுகம்
ADDED : ஜூன் 30, 2024 06:25 AM

பிரஞ்சு ஆட்சி காலத்தில் கப்பல்கள் மூலம் புதுச்சேரியில் வர்த்தகம் நடந்தது.
வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் சரக்குகள், பழைய துறைமுகத்தில் உள்ள குடோன்களில் வைத்து, சரக்கு ரயில்கள் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்ட பின்பு, துறைமுக வளாகத்தில் இருந்த குடோன்கள் பயனற்று கிடந்தது.
சுற்றுலா துறை மூலம் ரூ. 3 கோடி மதிப்பில் குடோன்களை குளு குளு வசதியுடன் கூடிய கன்வெர்ஷன் சென்டராக மாற்றினர். கடந்த 2021ம் ஆண்டு பணிகள் முடிந்தும் அதில் ஒரு நிகழ்ச்சி கூட நடத்தப்படவில்லை.
இந்நிலையில், கன்வெர்ஷன் சென்டர் அருகிலே ரூ. 4.44 கோடி மதிப்பில், நகர பொழுதுபோக்கு மையம் கட்டும் பணி கடந்த 2022ம் ஆண்டு துவங்கியது.
இசை நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் ஓப்பன் ஆம்பி தியேட்டர் வடிவில் பொழுதுபோக்கு மையம் அமைக்கப்பட்டு முடிந்துள்ளது. விரைவில் பொழுதுபோக்கு மையம் திறப்பு விழா காண உள்ளது.