/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய வாலிபர் கை துண்டானது
/
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய வாலிபர் கை துண்டானது
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய வாலிபர் கை துண்டானது
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய வாலிபர் கை துண்டானது
ADDED : ஜூன் 09, 2024 02:52 AM

பண்ருட்டி, : பண்ருட்டியில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய வாலிபரின் கை துண்டானது.
விழுப்புரம் மாவட்டம், அகரம்பாடியை சேர்ந்தவர் உமர்பாரூக் மகன் அப்துல்டெப்போரியா,24; இவர் நேற்று திருச்சியில் பண்ருட்டி வழியாக சென்னை செல்லும் (தடம்- 222676) சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார்.
மாலை 3:00 மணிக்கு ரயில் பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்தபோது, ரயில் நிற்பதற்கு முன் இறங்கிய அப்துல்டெப்போரியா, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான சந்தில் சிக்கி யதில், அவரது வலது கை துண்டானது. உடலில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அப்துல்டெப்போரியாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து கடலுார் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.