/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., அரசை 'டிஸ்மிஸ்' செய்ய அ.தி.மு.க., கோரிக்கை
/
தி.மு.க., அரசை 'டிஸ்மிஸ்' செய்ய அ.தி.மு.க., கோரிக்கை
தி.மு.க., அரசை 'டிஸ்மிஸ்' செய்ய அ.தி.மு.க., கோரிக்கை
தி.மு.க., அரசை 'டிஸ்மிஸ்' செய்ய அ.தி.மு.க., கோரிக்கை
ADDED : ஜூன் 20, 2024 09:14 PM
புதுச்சேரி: தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க அரசை உடனடியாக 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் என, புதுச்சேரி மாநில அ.திமு.க, செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கடந்த முறை மரக்காணத்தில் விஷ சாராயம் அருந்தி, 23 பேர் இறந்தனர். இன்று கள்ளக்குறிச்சியில், 30-க்கும் மேற்பட்டோர் விஷ சாராயத்தால் இறந்துள்ளனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனைக்கு, 19 பேர் சேர்க்கப்பட்டு, 3 பேர் உயிரிழந்தனர்.
முதல்வர் ஸ்டாலின், 30, க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு முழு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி இல்லை இந்திய அரசியலமைப்பு சட்டம் 356 பிரிவின் படி மத்திய அரசு ,தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.