/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நீட்' நுழைவு தேர்வில் சாதித்த ஆல்பா பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு
/
'நீட்' நுழைவு தேர்வில் சாதித்த ஆல்பா பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு
'நீட்' நுழைவு தேர்வில் சாதித்த ஆல்பா பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு
'நீட்' நுழைவு தேர்வில் சாதித்த ஆல்பா பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு
ADDED : ஜூன் 14, 2024 06:16 AM

புதுச்சேரி: நீட் தேர்வில் சாதித்த ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
உருளையன்பேட்டை மங்கலட்சுமி நகர் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 2023-24 கல்வியாண்டிற்கான நீட் தேர்வினை எழுதினர்.
இதில், மாணவர்கள் இளங்கோவன் 683, மேனோஜ் 655, அப்துல் அபீப் 625, ஜெகன் 615, திருக்குமரன் 610, குகன் 570, தினேஷ் குமார் 521 ஆகியோர் அதிக மதிப்பெண் எடுத்தனர்.
இதேபோல், மாணவிகள் பிரியதர்ஷினி 581, ரம்யாஸ்ரீ 437 நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதித்தனர்.
இந்தாண்டு 90 மாணவர்கள் நீட் நுழைவு தேர்வு எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
இதன் மூலம் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். நீட் தேர்வில் சாதித்த மாணவர்களை ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு சால்வை அணிவித்தும், பூங்கொத்து, இனிப்பு வழங்கி பாராட்டினார்.
ஆல்பா பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பாட பிரிவின் அடிப்படையில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.