Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஆக 23, 2024 06:32 AM

Follow on Google

ADDED : ஆக 23, 2024 06:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசில் 12 ஆண்டுகளுக்கு பிறகு 256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அமைச்சக பதவிகளில் அசிஸ்டண்ட் எனப்படும் 1,135 உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 20 சதவீதம் நேரடி நியமனமாகவும், 20 சதவீதம் துறை ரீதியாக லிமிடெடு தேர்வு நடத்தியும், 60 சதவீதம் பதவி உயர்வு மூலமும் நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி உத்தரவின்பேரில் கடந்த மார்ச் 14ம் தேதி 256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியானது. ஆனால் லோக்சபா தேர்தல் அறிவிப்பு காரணமாக விண்ணப்பம் பெறப்படவில்லை.

இதற்கிடையில் 256 அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு மீண்டும் நிர்வாக சீர்த்திருத்த துறை விண்ணப்ப அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. https://recruitment.py.gov.in மற்றும் https://dpar.py.gov.in என்ற இணையதளத்தில் இன்று 23ம் தேதி முதல் விண்ணப்பம் வரவேற்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 20 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில், பொது-104, எம்.பி.சி.,-46, எஸ்.சி.,-41, ஓ.பி.சி.,-28, இ.டபுள்யூ.எஸ்.,-25, மீனவர்-5, முஸ்லீம்-5, பி.டி.,-1, எஸ்.டி.,-1 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாற்று திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடாக 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap