/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுண்கலை முதுகலை படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
நுண்கலை முதுகலை படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
நுண்கலை முதுகலை படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
நுண்கலை முதுகலை படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 30, 2024 06:03 AM
புதுச்சேரி : புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலை முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரி, அரியாங்குப்பத்தில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக் கூடத்தில் நடத்தப்பட்டு வரும் இசை, நாட்டியம் மற்றும் நுண்கலைத் துறைகளுக்கான முதுகலைப் படிப்பில் சேர்வதற்கு, வரும்ஜூலை 1ம் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.ஆர்வம் உள்ள மாணவர்கள், பாரதியார் பல்கலைக் கூடத்தில் தபால் மூலமாகவும், நேரிலும் வந்து விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். மேலும், www:bpk.py.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும், ஜூலை 10ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ முதல்வர், பாரதியார் பல்கலைக்கூடம், கடலுார் மெயின் ரோடு, அரியாங்குப்பம், புதுச்சேரி -605007 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 0413-2600935 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை கல்லுாரி முதல்வர் அன்னபூர்னா தெரிவித்துள்ளார்.