/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அய்யனாரப்பன் சுவாமி திருகல்யாண உற்சவம்
/
அய்யனாரப்பன் சுவாமி திருகல்யாண உற்சவம்
ADDED : ஜூலை 25, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: மண்ணாடிபட்டு தொகுதி கைக்கிளப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம் சாகை வார்த்தல் நடந்தது.
மாலை பூரணி, பொற்கலை சமேத அய்யனாரப்பன் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், ஊஞ்சல் உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது.
இன்று (25ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.