தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக்கில் சென்றவர் கார் மோதி பலி

பைக்கில் சென்றவர் கார் மோதி பலி

பைக்கில் சென்றவர் கார் மோதி பலி


ADDED : ஜூன் 13, 2024 08:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2024 08:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம், : வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவரின் கார் மோதியதில், பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார்.

விருத்தாசலம் அடுத்த கவனை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் இளையராஜா,35; இவர் நேற்று முன்தினம் மாலை உளுந்துார்பேட்டை சாலையில் பெரியவடவாடி அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவரான சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சி.என்.ராமமூர்த்தி பயணம் செய்த இனோவா கார் மோதியது.

அதில் படுகாயமடைந்த இளையராஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி அளித்தபின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் அன்று இரவு இறந்தார். இவருக்கு மனைவி, ஒரு வயதில் குழந்தை உள்ளது.

இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார், விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான சென்னை குரோம்பேட்டை, புதிய காலனியை சேர்ந்த சற்குரு,28; என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us