Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., எம்.எல்.ஏ., திடீர் வெளிநடப்பு

பா.ஜ., எம்.எல்.ஏ., திடீர் வெளிநடப்பு

பா.ஜ., எம்.எல்.ஏ., திடீர் வெளிநடப்பு


ADDED : ஆக 15, 2024 05:01 AM

Follow on Google

ADDED : ஆக 15, 2024 05:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடல் அரிப்பு விவகாரத்தில் பதில் அளிக்காததை கண்டித்து பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் வெளிநடப்பு செய்தார்.

சட்டசபை பூஜ்ய நேரத்தின்போது கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசியதாவது:

கனகசெட்டிக்குளம், பெரியக்காலாப்பட்டு, சின்னக்காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. ைஹமாஸ், மினிமாஸ், மீனவர்களின் மீன் உலர்த்தும் கூடம் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டுள்ளது.

மொத்தம் 20 கோடி ரூபாய் அளவிற்கு அரசு சொத்துகள் சேதமடைந்துள்ளன.

நான்கு கிராமங்களில் பிணங்களை புதைக்கும் இடமும் காணாமல் போய்விட்டது. அப்பகுதிகளில் உயிருக்கும், உடமைகளுக்கும் உத்தரவாதம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

டெண்டர் விடும் வரை காத்திருக்காமல், துரிதமாக பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாககருங்கல் கொட்ட வேண்டும். ஆளும் கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக நானும் இறங்கி போராட்டம் நடத்துவேன்' என்றார்.

தொடர்ந்து இந்த கோரிக்கைய நிறைவேற்ற வலியுறுத்தி வெளிநடப்பு செய்தார்.

அவர், கூறுகையில், 'காலாப்பட்டு தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பு சம்பந்தமாக பூஜ்ய நேரத்தில் நான் கேட்ட கேள்விக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் பதில் அளிக்கவில்லை. மக்களுடைய பிரச்னைக்கு பதிலளிக்க மறுத்ததால் வெளிநடப்பு செய்தேன். கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட காலாப்பட்டு பகுதியில் துாண்டில் முள் வளைவு முறையில், கருங்கல் கொட்டப்படும். காலாப்பட்டு தொகுதியை புறக்கணித்தால் மக்களை திரட்டி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap