/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
/
பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
ADDED : ஜூன் 30, 2024 05:21 AM
புதுச்சேரி, : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் பா.ஜ., அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசியது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில், நடந்து முடிந்து லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார். இதையடுத்து, முதல்வர் ரங்கசாமிக்கு எதிராகவும், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பா.ஜ., அமைச்சர்களுக்கு எதிராகவும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அணி திரண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை, பா.ஜ.,எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், அங்காளன், அசோக்பாபு, சிவசங்கர். வெங்கடேசன், ரிச்சர்டு ஆகியோர் கவர்னர் ராதாகிருஷ்ணனை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினர். காலை 9.30 மணிக்கு துவங்கிய இந்த சந்திப்பு 11:30 மணி வரை நீடித்தது.
கவர்னரிடம், 'எங்களை கலந்து ஆலோசிக்காமல் எங்கள் தொகுதியில் பள்ளி, கல்லுாரிகள் இருக்கும் பகுதிகளில் ரெஸ்ட்டோ பார் நடத்த அனுமதி வழங்கப்படுவதால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதுதான் லோக்சபா தேர்தலில் தோல்வியடைய காரணமாக மாறியது.
விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது, உங்களுடைய தொகுதிக்கு எந்த திட்டம் வேண்டும் என்று முதல்வர் கேட்பதில்லை. ஆனால், எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு செய்கிறார்.
அப்புறம் எதற்கு கூட்டணியில் இருக்க வேண்டும். பா.ஜ., சார்பில் அமைச்சர் பதவிகளை சுழற்சி முறையில் மாற்றி வழங்க வேண்டும் என்று சரமாரியாக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மனம் குமுறினர்.
அனைத்தையும் கேட்டுக்கொண்ட கவர்னர் ராதாகிருஷ்ணன், இதுதொடர்பாக மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். தொடர்ந்து அங்கிருந்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் புறப்பட்டு சென்றனர்.
இவர்கள் அடுத்ததாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரை வரும் 2ம் தேதி டில்லியில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.
முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பைட ஏற்படுத்தியுள்ளது.