/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெளிமாநில தொழிலாளிகளுக்கு ரத்த பரிசோதனை முகாம்
/
வெளிமாநில தொழிலாளிகளுக்கு ரத்த பரிசோதனை முகாம்
ADDED : ஜூன் 29, 2024 06:21 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் தங்கி உள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு மலேரியா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய ரத்தப் பரிசோதனை முகாம் நடந்தது.
புதுச்சேரியை மலேரியா இல்லாத மாநிலமாக மாற்ற மலேரியா துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த மாதத்தை மலேரியா ஒழிப்பு மாதமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் மூலம் மலேரியா நோய் பரவுகிறதா என்பதை கண்டறிய, தட்டாஞ்சாவடி தொழில்பேட்டையில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு நேற்று லாஸ்பேட்டை நகர சுகாதார மைய சுகாதார ஆய்வாளர் அலமேலு தலைமையில் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து மலேரியா நோய் பரவுவதற்கு காரணமாக உள்ள திறந்த நிலையில் இருக்கும் நீர் தொட்டிகள், நீர்த்தேக்கம் உள்ளிட்டவைகளை மூடி சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்தினர்.
இதேபோல் காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சுகாதார ஆய்வாளர்கள் சென்று ரத்தப் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.