/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்விற்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமுலு அறிவுறுத்தல்

ADDED : ஜூன் 08, 2024 04:50 AM
புதுச்சேரி : ஏற்கனவே பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தாலும், புதிதாக சென்டாக் இணையதளத்தில் மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய நர்சிங் கவுன்சிலின் அறிவுறுத்தலின் பேரில், முதலாம் ஆண்டு பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு சென்டாக் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் என, முன்னதாக அறிவித்தது.
சென்டாக் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான புதிய பதிவு சென்டாக் இணையதளத்தில் வரும் 10ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பித்து இருந்தாலும், புதிதாக சென்டாக் இணையதளத்தின் மூலம் பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு கட்டாயம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
தவறினால் மாணவ, மாணவியர் புதுச்சேரி பொது நர்சிங் நுழைவு தேர்வு பங்கேற்க முடியாது. இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் உள்ள பி.எஸ்சி., சுய நிதி இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் மதர்தெரசா பட்டமேற்படிப்பு மையத்தில் உள்ள பி.எஸ்சி., சுயநிதி ஒதுக்கீட்டு இடங்கள், என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களுக்கு யூ.ஜி., நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.